டார்ஜான் (Tarzan) ஆங்கில படங்களில் “சீடா Cheetah” என்ற மனித குரங்கு நடித்துள்ளது. இந்த குரங்கு கடந்த 24-ந்தேதி அமெரிக்காவில் மரணம் அடைந்தது. அப்போது அதற்கு வயது 80. கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பாலம் ஹார்பரில் உள்ள விலங்குகள்
சரணாலயத்தில் இருந்தது.
இது சமீபத்தில் இறந்த தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது கடந்த 1930-ம் ஆண்டில் மார்ஜான் தி ஏப் மேன் என்ற படத்திலும், 1932-ம் ஆண்டில் டார்ஜான் அன்ட் கிடிஸ் மேட் என்ற படத்தில் நடிகர் ஜானி வேஸ்முல்லர் நடிகை மவுரீன் ஓ சுல்லிவன் ஆகியோருடன் நடித்துள்ளது.
சீடா மனித குரங்கு கடந்த 1960-ம் ஆண்டு முதல் பால்ம் ஹார்பர் சரணாலயத்தில் இருந்து வந்தது. அது அங்கு வரும் அனைவரையும் கவர்ந்தது. ஓவியங்கள் மற்றும் இசையில் சீடாவுக்கு ஆர்வம் அதிகம்.அவற்றை மிகவும் ரசித்து வந்தது. கால் பந்து விளையாட்டை மிகவும் ஆர்வத்துடன் ரசிக்கும் என சரணாலய இயக்குனர் டெப்பி கோப் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக