ஹொலிவூட் நடிகையின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹொலிவூட் நடிகை கில்லியன் அண்டர்சன் (Gillian Anderson) உடைய சொத்துக்கள் கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பஸியாலை என்ற இடத்தில் காணப்படுகின்றன. அதனை கண்காணிப்பதற்காக இலங்கையர் ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த இலங்கையர் ஹொலிவூட் நடிகையின் சொத்துக்களை வேறு ஒரு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் சந்தேகநபர் 17.8 மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக