யாழ் தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து 7 வயதுச் சிறுமி மீது இனந்தெரியாத நபர் ஒருவர் பலாத்காரம் புரிந்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நேற்றுப் பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடொன்றில் தாய், தந்தையர் மற்றும் சகோதரர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியே வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவுவேளையில் வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அந்த நபர் சிறுமியின் வாயைப் பொத்தியதால், அவளால் உதவி கோரி சத்தமிடமுடியவில்லை.
தூக்கிச் சென்ற மர்ம மனிதன் சிறுமியை, அவளின் வீட்டின் அருகிலுள்ள பற்றை ஒன்றுக்குள் வைத்துச் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். இதன்பின்பு சிறுமியை அப்படியே விட்டு விட்டுச் சென்றுள்ளான்.
அதிகாலையில சிறுமியைக் காணாது பெற்றோர் தேடியபோது அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து அவள் அழும் சத்தம் கேட்டது. அங்கே சென்று பார்த்தபோது அழுதபடி பயத்தால் உறைந்த நிலையில் சிறுமி காணப்பட்டாள்.
சிறுமிக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் அவள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் நேற்று மதியம் வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக