புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மக்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கிறார்களோ இல்லையோ கட்டாயம் பேஸ்புக் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி நம்மோடு ஒன்றிப்போயுள்ள பேஸ்புக் எமது ரகசியங்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறது
என்றால் எத்தனைபேர் நம்புவீர்கள்… பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, பெழுதுபோக்கு வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி விற்றுவிடுகிறதாம் பேஸ்புக்.

இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.

உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.

இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார்.

ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top