புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் 23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.கின்னஸ் சாதனைக்கான அரங்கில் தமிழ் உறவுகள் உட்பட ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டு
இருந்தனர்.சுதாகரன் சிவஞானதுரையின் ( வயது 37 ) தலை மயிரில் ஒரு வகை நாடாவால் பலமாக சுருக்குப் போடப்பட்ட்து.

தரையில் இருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தரத்தில் தொங்கினார்.இவரது நிறை. 57 கிலோ. கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தியானம், யோகா ஆகியவற்றை வாழ்வியல் ஒழுக்கமாக கடைப்பிடித்து வருகின்றமையால்லும், . இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்துகின்றமையால் முடி மிகவும் பலமானதாக உள்ளமையாலும் இச்சாதனையை நிறைவேற்ற முடிந்து உள்ளது என சாதனை வீரன் சுதாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.

இவரது இச்சாதனை முயற்சி முன்பு இவ்வுலகில் எவராலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top