புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம்.தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில் விழ வேண்டும்.

நோர்வேயில் அமைந்துள்ள Pulpit Rock என்று அழைக்கப்படும் குறித்த பிரதேசம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.

அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.

விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்...

எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா? கவனம், தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top