மதுபோதை உச்ச நிலையை அடைந்ததும் தான் ஏறும் பஸ் எது என்று தெரியாமல் வேலணைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார் ஒரு முதியவர்.
இருந்தும் அவர் செல்லும் இடம்தெரியாத பஸ் நடத்துநர் அவரை வேலணை வங்களாவடிச் சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இறக்கி விட்டுச்
செல்லவே நேற்று முன்தினம் முதல் இன்றுவரை அவ்விடத்திலேயே தனது காலத்தைக் கழித்துள்ளார் அந்த முதிவர்.
இரவு முழுவதும் அந்த பஸ் தரிப்பு இடத்தில் தனது பொழுதைக் கழித்து காலையில் எழுந்து இது எந்த இடம் என்று அப் பகுதியில் உள்ளவர்களை விசாரித்துப் பின் தனது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக