பெல்ஜியம் நாட்டின் லீஜ் நகரின் முக்கிய ஷாப்பிங் பகுதி பிளேஸ் செயின்ட் லேம்பர்ட். இங்கு 200க்கும் அதிகமான கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 10 நாட்களே இருப்பதால் நேற்று ஷாப்பிங் களைகட்டியிருந்தது. தெருக்களிலும்
கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அப்போது, அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே கையெறி குண்டுகளை வீசி ஒருவன் திடீர் தாக்குதல் நடத்தினான். பிறகு, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டான். மக்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் கடைகளில் பதுங்கினர். இந்த கொடூர தாக்குதலில் 2 பள்ளி மாணவர்கள், பெண் பலியாயினர். 123 பேர் படுகாயம் அடைந்தனர். கடைசியில் அவன் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘அவன் ஒரு பை வைத்திருந்தான். அதிலிருந்து கையெறி குண்டை எடுத்து வீசினான். பிறகு தனது துப்பாக்கியால் எல்லா திசையிலும் சுட்டான். தன்னையும் சுட்டுக் கொண்டான்’’ என்றனர். அவன் பெயர் நார்டின் அம்ரானி (33). போதை பொருள் கடத்தல், கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்தவன் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீவிரவாத தாக்குதல் இல்லை என உள்துறை தெரிவித்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக