ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா.வும், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ஏஜென்சியும் ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும், சர்வதேச
நாடுகளின் அணுசக்தி கொள்கைகளை மீறி ஈரான் செயல்படுவதாகவும் அணுஆயுதங்கள் தயாரிப்பதாகவும் கூறி, பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. Ôஈரான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால், அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஆனால், அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் தேவை. இதை எந்த நாடுகளும் வழங்கவில்லை. ஆனால், கடந்த 93ம் ஆண்டு அர்ஜென்டினா, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை வைத்து இத்தனை ஆண்டுகளாக அணு உலை திட்டப் பணிகள் நடந்து வந்தன. அந்த யுரேனியம் சக்தி குறைந்த 3.5 சதவீதமே செறிவூட்டப்பட்டது. இந்நிலையில், அணு உலைகளுக்கு தேவையான அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஈரான் முடிவெடுத்துள்ளது. டெஹ்ரானில் உள்ள அணு உலைக்கு தேவையான யுரேனியம் எரிபொருள் இன்னும் 2 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும். 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்நாட்டிலேயே தயாரிப்போம். எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி நேற்று கூறினார். இதனால் பல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக