புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அஞ்சுகிராமம் அருகே மேட்டுகுடியிருப்பைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் செல்வராஜகுமார்(39). இவர் ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். அனிதா(33) பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 

வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த செல்வராஜகுமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இவர் ஊருக்கு வந்தநாள் துவங்கி கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை வெட்டி கொன்றதாக கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் வெளிநாட்டில் இருந்து வந்தபிறகு என்னுடைய மனைவியின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடன் சண்டை போட்டுவிட்டு அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள். என் வீட்டில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு, ஜன்னல்களில் தட்டுவதை நான் கேள்விபட்டேன். அதன் மூலம் எனது மனைவியின் மீது சந்தேகம் வலுத்தது. 

கொலை சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு என்னுடைய வீட்டின் பின் கதவு திறந்து இருந்தது. என்னுடைய மனைவி விழித்திருந்தாள். நான் யார் வந்தார்கள் என்று கேட்டபோது என்னை ஆபாசமாக திட்டினாள்.ஒன்று நான் சாக வேண்டும், இல்லை அவள் சாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். கொலை நடந்த அன்று காலை எனது பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபிறகு வீட்டில் இருந்த அரிவாளால் அவளை வெட்டினேன். ஆத்திரம் தீர்ந்தவுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். பிறகு என்னை போலீசார் கைது செய்தனர் என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top