குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 50 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர் இவர்களில் 49 பேர் பெண்களென தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் குவைத்தில் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு
உள்ளான நிலையில் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு குறிப்பிடுகிறது.
அவர்கள் அனைவரையும் வீடுகளுக்கு விரைவாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக