பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருந்து தோழி பிரிந்ததால், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இங்கிலாந்தின் குளோஸ்டெர்ஷைர் பகுதியில் உள்ளது ஹைட். இங்கு வசித்தவர் சைமன் பாக்ஸ்லே. வயது 21. சமூக இணையதளமான பேஸ் புக்கில் இவர் பலருடன் நட்பு வைத்திருந்தார். அவர்களில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் மீது சைமனுக்கு காதல் ஏற்பட்டது. தனது
எண்ணத்தை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தினார். அவ்வளவுதான், தனது பேஸ் புக்கில் இருந்து Ôநண்பர்Õ என்ற தொடர்பை அந்த பெண் துண்டித்துக் கொண்டார். விரக்தி அடைந்த சைமன், மற்ற நண்பர்கள் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த நண்பர்களும் சைமனை தரக்குறைவாக பேசினர்.
பெண்ணை தொந்தரவு செய்யாதே, செத்து தொலை போன்ற எஸ்எம்எஸ்.களையும் நண்பர்கள் அனுப்பி கடுமையாக எச்சரித்தனர். அதில் மனம் உடைந்த சைமன், வீட்டு தோட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த பெண்ணுக்கு எழுதிய கடிதத்தில், எனக்காக நீ செய்த எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக