புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியை சேர்ந்த 99 வயது தாத்தா தனது 96 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள் இவர்கள்தான் என்ற சாதனை படைத்துள்ளனர்.இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியோ சி (99). இவர் சமீபத்தில் வீட்டை
சுத்தம் செய்யும் போது, அவரது மனைவிக்கு வந்த கடிதம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதை பிரித்து படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதம் அவர் மனைவிக்கு வந்திருந்த மிகப்பழமையான காதல் கடிதம். மனைவியிடம் இதுகுறித்து கேட்ட போது அவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அன்டோனியோ மனைவியிடம் இருந்து விவாகரத்து கோர முடிவு செய்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1940களில் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல் இருந்ததற்கான ஆதாரம் சமீபத்தில் கிட்டியதால் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top