புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாணவியான மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. கேரளா கண்ணூர் மாவட்டம், தலசேரி கொட்டியூர் அம்பாயத்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 48, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகளை, ஒரு நாள் நள்ளிரவு மிரட்டி
கற்பழித்தார்.

தொடர்ந்து பல இரவுகள் இக்கொடுமையை அவர் அனுபவிக்க நேரிட்டது. இதுபற்றி அவர், தன் தாயிடம் அழுது முறையிட்டும் பலன் இல்லை. தந்தையால், கர்ப்பிணியான மாணவி, பள்ளியில் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்தார். பின்னர், ஆண் குழந்தையை பிரசவித்தார். அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்தவரிடம் வளர்க்க கொடுத்து விட்டார்.

பிரசவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து, மீண்டும் பள்ளி சென்றார். ஆனால், மன உளைச்சல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 2007 டிச., 6ம் தேதி தனது சித்தப்பா உதவியால் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அவரின் தந்தையை கைது செய்து, பலாத்காரம், மிரட்டல் ஆகியவற்றின்பேரில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்(3) நீதிபதி இந்திரா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், மகளை மிரட்டி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தினால், அத்தொகை மகளிடம் ஒப்படைக்கவும், அபராதம் செலுத்தாவிடில், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top