சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜித்தா பொது நீதி மன்றத்தில் மூன்று
நீதிபதிகளைக் கொண்ட குழாம் இத்தீர்ப்பினை அளித்துள்ளது.
மேலும்,கொலையில் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் எட்டுப்பேருக்கு கசையடிகளும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கயான், இஸ்க் மற்றும் பர்ஷான் ஆகிய மூவருக்கு சிரச்சேதம் செய்யப்படவுள்ளதுடன் அஷ்ரப், குமார், ரஜீஸ் , ரங்கீத், முஹமட் கொனா ஆகியொருக்கு 5வருட சிறைத்தண்டனையும் 1000 கசையடிகளும் வழங்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நௌரா என்ற பெண்ணுக்கு 4 வருட சிறைத்தண்டனையும் 400 கசையடிகளும், ராஜீயா, அஜீஸ் ஆகிய இருவருக்கும் 6மாதகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கட்டி இரும்புக் பொருள் ஒன்றினால் அடித்துக் கொன்றுள்ளதுடன் கொள்ளையிலும் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இவர்கள் அனைவரும் கொலையில் சம்பந்தப்பட்டதை ஒப்புக் கொண்டதன் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக