உண்மையில் இது ஒரு கொடூரமான வீடியோ தான்.உலகின் மிகவும் ஆபத்தான சாலையில் பயணிக்கும் பஸ்சுக்கு நேர்ந்த கதியைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.ஆம், கரடுமுரடான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென நிலை தடுமாறி பள்ளத்துக்குள்
விழுந்துள்ளது. அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விழுந்துள்ளது. அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிவியா நாட்டில் உள்ள மலைப் பாதையில் தான் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் சாரதி ஆபத்தான குறுகிய பாதையில் பயணிக்க வேண்டி இருந்ததால் பயணிகளை இறக்கி விட்டு துணிச்சலுடன் தனியே பஸ்ஸை எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனாலும் கடுமையாக மழை பெய்து பாதை சேறும் சகதியுமாக காணப்பட்டதால் துரதிஷ்டவசமாக பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. பயணிகள் வீதி ஓரத்தில் நின்று பயத்தில் கூக்குரலிடுகின்றனர்.
38 மைல்கள் நீளமான இந்தப் பாதையில் வருடத்துக்கு 300 க்கு மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு "உலகின் மிக ஆபத்தான சாலை" என்று அமெரிக்க அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் பலியான சாரதியைத் தவிர பஸ்ஸில் பயணம் செய்த சுமார் ஐம்பது பயணிகளும் இறங்கியிருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக