புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தெற்கு அதிவேக வீதியின் விதிமுறைகளை மீறிய இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதிவேக வீதியின் இடையே இரண்டு பயணிகளை இறக்கியமையினால் பஸ் சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் எந்தவொரு வாகனத்திற்கும் இடைநடுவே நிறுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

மஹரகமயிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த இரண்டு பயணிகளையும் சட்டவிரோதமாக குருதுகஹஹெதெப்ம நுழைவாயிலுக்கு அருகில் பஸ் சாரதி இறக்கிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பிரகாரம் குறித்த பஸ் பின்னதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில், சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதிக்குள் பிரவேசித்த ஆடொன்றின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top