புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் கடும் பனி மூட்டத்தால் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து 16 பேர் உடல் நசுங்கி இறந்தனர். சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பல இடங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் சாலைகள் மூடிகிடக்கின்றன. வழி தெரியாமல்
சமீபகாலமாக பல விபத்துகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் மத்திய
பகுதியில் உள்ள அன்ஹூய் என்ற பகுதியில் நேற்று பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். மலைப்பாங்கான இடத்தில் பாலத்தில் பஸ் சென்றபோது, பனிமூட்டம் அதிகமாக இருந்தது. வழி தெரியாமல் சென்ற போது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top