இது ஓர் அதிசயம். சிறு மலைக் குகை ஒன்றினுள் இறந்த தாயின் உடலத்தோடு இருந்த இரண்டு வயதுக் குழந்தை காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகனம் Ardèche இலுள்ள Payzac எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.திங்கள் அதிகாலை இந்தக் குழந்தையும் தாயும் சென்ற
வாகனம் ஒரு வளைவில் கட்டுப்பாடிழந்து 40 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது. கீழே இருந்த மலைக் குகையொன்றினுள் வாகனம் விழுந்துள்ளது.
வாகனம் ஒரு வளைவில் கட்டுப்பாடிழந்து 40 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது. கீழே இருந்த மலைக் குகையொன்றினுள் வாகனம் விழுந்துள்ளது.
விபத்தில் தாய் கொல்லப்பட்டுள்ளார். இவர்கள் வீடு திரும்பவில்லை என அடுத்த நாளே முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஒரு இரவின் பின்னரே வாகனத்தைக் கண்டு பிடிக்க முடிந்துள்ளது.
வெளியில் 1° மற்றும் 2° யில் கடும் குளிர் வீசியுள்ளது. இறந்த தாயின் உடலத்தோடு உடல் குளிர்ந்து அதிஉறை நிலைக்குள் வந்திருந்த இரண்டு வயதுக் குழந்தை இராணுவத்தின் காவற்துறைப் பிரிவால் மீட்கப்பட்டுள்ளது.
உடல் களைத்த நிலையில் இருந்த குழந்தை தம்மைக் கண்டவுடன் அழுதபடி கைகளை நீட்டியதாகக் காவற்துறையினர் கலங்கிய விழிகளோடு தெரிவித்துள்ளனர். காணமற்போன முறைப்பாட்டை அடுத்து உடனடியாகக் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்ததாலேயே குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக