புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள சிறிய வயதினரை மீட்க அரசு புதிய வழிமுறைகளை மது விற்பனையில் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பழக்கத்தில் இருந்து இவர்களை காப்பாற்ற அமைச்சரவை புதிய சட்டம் ஒன்றையும்
இயற்றியுள்ளது.அதில் மதுசில்லரை விற்பனை நிலையம் இரவு பத்துமணி முதல் காலை ஆறு மணி வரை திறக்ககூடாது, இதனால் இவர்களிடையே குடிப்பது குறையும் என்று அரசு எதிர்பார்கிறது.

மேலும் மதுக்கடைகளும் உணவகங்களும் இளையோருக்கு குறைந்த விலையில் சாராயக் கலப்பில்லாத மதுவை மட்டும்மே வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிர் மற்றும் ஒயின் பருக அரசு அனுமதிக்கும் குறைந்த பட்ச வயது பதினாறாகும். ஸ்பிரிட் என்னும் சக்தி அதிகம் வாய்ந்த மதுவை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பருகலாம் என அரசு அறிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top