பிரான்ஸ் நாட்டில் இருந்து லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வந்த அக்கா தங்கை மற்றும் அவர்களின் காதலர் ஒருவரும் சேர்ந்து தனது சொந்த தம்பியை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மிகவும்
கொடூரமான கொலை வழக்காகக் கருத்தப்படும் இவ்வழக்கில் சாட்சிகள் தமது வாக்கு மூலத்தை பதிவுசெய்துகொண்டனர். கிருஸ்டி பாமு என்று அழைக்கப்படும் 15 வயதுச் சிறுவனை அவரின் குடும்ப அங்கத்தவர்களான சகோதரிகளே கொலை செய்தனர் என்ற அதிர்ச்சியான வாக்குமூலம் நேற்றைய தினம் பதிவுசெய்யப்பட்டது.
குறிப்பிட்ட சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. லண்டனில் அவர்கள் தங்கியிருந்தவேளை மெத்தையில் அவன் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகறாரில் இச் சிறுவனை சுத்தியல் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார் அவரின் சகோதரி.மேலும் இச் சிறுவனை சுமார் 4 நாட்களாக கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. தலை மற்றும் முகத்தில் பாரிய காயங்களுடன் இச் சிறுவன் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடியுள்ளான். தனக்கு உயிர் பிச்சை தருமாறு சகோதரியிடம் கேட்டுள்ளான்.
ஆனால் அவன் ஒரு சூனியக் காரன் என்று கூறி அச்சிறுவனின் சகோதரிகள் அவனைத் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இறுதியாக அடி காயங்கள் காரணமாக 4 நாட்கள் கழித்து இச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.குறிப்பிட்ட இச் சம்பவம் 2010ம் ஆண்டு நடைபெற்றபோதிலும் அதற்கான சாட்சியங்கள் தற்போது தான் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இச் சிறுவனின் அனைத்துச் சகோதரிகளையும் பிரித்தானியப் பொலிசார் கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் இச் சிறுவனின் உடலில் 101 அடி காயங்கள் காணப்படுகிது என்பதாகும்.
அந்த அளவுக்கு கொடூரமாக இச் சிறுவன் தாக்கப்பட்டுள்ளான் என்பதே மிகவும் வேதனையான விடையம். உலகில் மனிதர்களுக்கிடையே ஆன பாசப் பிணைப்புகள் அருகி வருவதற்காக எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது எனலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக