சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தினரால் இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிடுகின்றார்.
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இந்த மீன்பிடிப் படகு பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகிலிருந்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்தப் படகு தேவேந்திரமுனையிலுள்ள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது என அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்த மீன்பிடி படகு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஏழாம் திகதி மீன்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 22 பேர் தங்காலை ருக்வெவ பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக