பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் ராமராஜ் குருசாமி(35). இவரது மனைவி ரோஜா(22). இவர்களது மகன் பார்த்திபன்(1). ரோஜாவின் நடத்தையில் குருசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்கிடையே
அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரோஜா கோபித்துக் கொண்டு, குழந்தையுடன் வேப்பந்தட்டையில் உள்ள தனது தாய் ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரோஜா கோபித்துக் கொண்டு, குழந்தையுடன் வேப்பந்தட்டையில் உள்ள தனது தாய் ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு குருசாமி மாமியார் வீட்டுக்கு சென்று, மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துள்ளார். காலையில் செல்லலாம் என ரோஜா கூறியுள்ளார். இதையடுத்து அங்கு குருசாமியும், குழந்தை பார்த்திபனும் ஒரு அறையிலும், ரோஜாவும், அவரது தாய் ராணியும் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் ரோஜா எழுந்து பார்த்தபோது குருசாமியையும், குழந்தையையும் காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை வேப்பந்தட்டையில் ஒரு திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் குழந்தை பார்த்திபனின் சடலம் மிதந்தது. தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை குருசாமி தான் கிணற்றில் வீசி கொலை செய்திருக்க வேண்டும் என போலீசில் ரோஜா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள குருசாமியை தேடிவருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக