தென் ஆப்ரிக்காவில் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்த விவரம் வருமாறு:தென் ஆப்ரிக்காவின் ஜோக்கன்னஸ்பர்க் மேற்கு பகுதியில் உள்ளது ரேண்ட்போடின் நகரம்.
இங்கு 34 வயது கர்ப்பிணி பிரசவத்துக்காக காத்திருந்தார்.இந்நிலையில் 29 வயதுடைய இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.
அதன்பிறகு கர்ப்பிணியை ரத்தவெள்ளத்தில் விட்டுவிட்டு குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.அதன்பின், கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் அப்பள் எர்ன்ஸ்ட் கூறுகையில், 'முதலில் அதிக ரத்த போக்கால் கர்ப்பிணி இறந்ததாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை திருடப்பட்டது தெரிந்தது.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அவர் மீது கொலை, கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.அந்த பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக உள்ளது. ஆனால், குழந்தையின் தாய்தான் பரிதாபமாக உயிரிழந்தார். தென் ஆப்ரிக்காவில் பிறந்த குழந்தைகள் திருடு போவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக