புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த 17வயது வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சை மாரியம்மன் கோயில் அருகே உள்ள காடவராயன்குளத்தை சேர்ந்த விவசாயி சின்னதம்பியின் மகள் தேவி(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) 14 வயதான இந்த சிறுமியை
கடந்த மாதம் 3ம் தேதி முதல் காணவில்லை.

இது குறித்து சிறுமியின் தந்தை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில், அதே ஊரைச்சேர்ந்த 17 வயது வாலிபர்தான் கடத்திச்சென்றிருப்பான் என சந்தேகிப்பதாகவும் கூறி இருந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், வாலிபரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் தட்டக்குடி என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தேவியும் கணவனுடன் தான் இருப்பேன் என அடம் பிடித்தார். தேவி மைனர் பெண் என்பதால் அவரை கடத்தியதாகவும்,  மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாகவும் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த திருமணத்துக்கு உதவியாக இருந்ததாக இளையராஜா(26), கருப்பையன்(32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தேவியை கோர்ட்டில் ஆஜர் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top