புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

போதைக்கு அடிமையான கணவன் தீக்குளித்த போது காப்பாற்ற சென்ற மனைவி, தீயில் கருகி படுகாயமடைந்தார். சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் தேவா, 27; பெயிண்டர். இவருக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு தம்பியும் உள்ளனர். முகப்பேர் பகுதியில் வேலைக்கு சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த சித்ராவுடன் 25, பழக்கம் ஏற்பட்டது. காதல் முற்றி பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. 3 வயதில் நந்திதா என்ற குழந்தையும் உள்ளார். நண்பர்களுடன் மது அருந்தி பழகிய தேவா, போதைக்கு அடிமையானார்.

 இது குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தியது. சண்டை போடும் போதெல்லாம் குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவேன் என சபதம் செய்த தேவா, மேலும் மேலும் அந்த பழக்கத்துக்கு அடிமையானார். இடத்தை மாற்றினால் மனதில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிய சித்ரா, குடியிருப்பை, தன் தாய் வீட்டருகே, முகப்பேருக்கு மாற்றினார். நிலைமை சீராகவில்லை. மகளிடம் தேவா தினமும் சண்டை போடுவதை அறிந்த சித்ராவின் பெற்றோர் தேவாவை கண்டித்தனர். நேற்று முன்தினம் காலையில் தேவா, வழக்கம் போல் குடித்து விட்டு, சண்டை போட்டார். அதை பார்த்த சித்ராவின் அம்மா பச்சையம்மா, 40, திட்டியுள்ளார். பச்சையம்மாவை தேவா எதிர்த்துப் பேசினார். அப்போது சித்ராவின் அப்பா, தேவாவை திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. எல்லோர் முன்பும் தன்னை கேவலப்படுத்தியதாக நினைத்த தேவா, மீண்டும் மதுபானம் அருந்தி விட்டு, வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் சண்டை வந்தது. கோபம் கொண்ட தேவா தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். கணவன் தீக்குளிப்பதை பார்த்த சித்ரா, தீயை அணைக்க முயன்றார். அப்போது சித்ரா உடம்பிலும் தீப்பிடித்தது. சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது உறவினர்கள் வந்து தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல், தேவா உயிரிழந்தார். சித்ரா கவலைக்கிடமாக உள்ளார். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top