புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


1980 ஆண்டு காலப்பகுதியில் சாந்தையில் வாழ்ந்த அன்றைய இளைய சமூகத்தினரின்  இடைவிடா முயற்சியினால் 1983 ம் ஆண்டு பங்குனி மாதம் 7 ம் திகதி அன்று சாந்தை சித்திவிநாயகர் ஆலய வீதியில் பிரசுவித்தது தான் இந்த அழகிய சாந்தை மகன்.அன்றைய ஆலய ஆதினகர்த்தாவாக திகழ்ந்த
திரு ஆறுமுகம் பஞ்சாச்சரம் (குஞ்சர் அய்யா) அவர்கள் அன்றைய இளைஞர்களின் விருப்பை அறிந்து சனசமுகநிலையம் அமைப்பதற்கு தனது ஆலய வீதியிலேயே அனுமதி வழங்கி சாந்தை மக்கள் மனதில் குடிகொண்டவர் .

1983 இல் இருந்து இயங்க ஆரம்பித்த சனசமுகநிலையம் தினமும் நாளாந்த பத்திரிக்கை ஒன்றினை பிரசுரித்து வந்ததுடன் பாலர் பாடசாலையும் சனசமுகநிலையத்தில் நடாத்தப்பட்டு வந்தது அத்துடன் அன்றைய இளைஞர்களின் ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்தது . இவ்வாறு சிறப்பாக இயங்கி வந்த சனசமுக நிலையம் சண்டிலிப்பாய் பிரதேச சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்த காலத்தில் சனசமுக நிலையத்தில் சிறிய சேதங்கள் ஏற்ப்பட்டு (சுவர்களில் சிறிய ஓட்டை,கதவுகள் யன்னல்கள் இல்லாது) காணப்பட்டது.1998 ஆண்டு காலப்பகுதியில் அன்றைய இளைஞர்களினால் அந்த ஓட்டைகள் களிமண்ணால் அடைக்கப்பட்டு பழைய கதவு போடப்பட்டு யன்னல்கள் இன்றி சனசமுக நிலையம் இயங்க ஆரம்பித்து தினமும் இரண்டு பத்திரிகை பிரசுரிக்கப்பட்டது.

இவ் கால கட்டத்தில் தான் எமது ஊர் பெரியவர்களின் வழிகாட்டலில் அன்றைய இளைஞர்களினால் சாந்தை சித்தி விநாயகர் ஆலய உள் வெளி வீதி களிலும் சனசமுக நிலையத்திற்கு முன்பும் சாந்தை சிற்றம்பல வித்தியாலய வளாகத்திலும் பல மரக்கன்றுகள் வேறு பிரதேசங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு நட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருந்த காலத்தில் சாந்தை சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முன்னால் இலங்கை எம்பி மகேஸ்வரன் அவர்கள் தமது கட்சி இவ் தேர்தலில் வெற்றி பெற்றால் எமது சனசமுக நிலையத்தை திருத்தி தருவதாக உறுதி வழங்கிச்சென்றார் .அவர்களது கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. அவரினால் எமது சனசமுகநிலையத்திற்கு ஒதுக்கபட்ட நிதியினை கொண்டு சனசமுக நிலைய கூரை பிரிக்கப்பட்டு உடைந்து காணப்பட்ட சுவர்கள்  சீமெந்தினால் அடைக்கப்பட்டு புதிதாக கூரை வேலை செய்து புதிய கதவு யன்னல்கள் போடப்பட்டு புதிய மேசை வாங்குகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் மானிப்பாய் பிரதேச சபை அதிகாரி ஒருவரினால் திறந்து வைக்கப்படட்டு சிறப்பாக இயங்கி வந்தது. 


இவ் காலகட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமுக நிலையங்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் சனசமுக நிலையங்களில் ஒன்றாக எமது சனசமுக நிலையம் திகழ்ந்தது .பின்னர் சிறிது காலம் மூடப்பட்டு இருந்தது இளைஞர்களின் முயற்சியினால் மீண்டும் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்தது .இவ் காலத்தில் இலங்கை அமைச்சர் டக்கிலஸ் தேவானந்த அவர்களால் எமது சனசமுக நிலையத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட சிறிய நிதி தொகையினை கொண்டு சனசமுக நிலையத்திற்கு மின்சார இணைப்பு வேலையும் சனசமுக நிலையத்திற்கு உள் லெவல் சீட் அடிக்கப்பட்டும் நிலையத்திற்கு வர்ணமும் (பெயின்ற்) தீட்டப்பட்டது .


இவ் காலத்தில் சனசமுக நிலையம் இளைஞர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்தது நவராத்திரி காலங்களிலும் சனசமுக நிலையத்தில் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது . பின்னர் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக இளைஞர்களின் பங்களிப்புகள் இன்றி சனசமுக நிலையம் சிறிது காலம் மூடப்பட்டு இருந்தது. புலம் பெயர் இளைஞர்களின் ஊக்கிவிப்பினால் சனசமுகநிலையம் சிறிது காலத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  ஊரில் வாழும் இளைஞர்களின் முயற்ச்சியுடனும் புலம்பெயர்ந்து வாழும் எமது ஊர் மக்களின் ஊக்கிவிப்புடனும் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையம் 29 வது அகவையில் நவீன மயமாக்கப்படயுள்ளது.


கணணி அறை,கணணி இணைப்பு ,புத்தக அறை,பெறுமதியான புத்தகங்கள்,பத்திரிக்கை படிப்பதற்குரிய அறை நவீன வசதியுடன், மற்றும் வகுப்பறை என்பவற்றை தன்னகத்தே கொண்டு சனசமுக நிலையம் நவீன மயமாக்கபடுவதற்க்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. வெகு விரைவில் சாந்தை சித்தி விநாயகர் சனசமுகநிலையம் புதுப்பொலிவுடன் நவீன வசதியுடன் தனது சேவையினை எமது மக்களுக்கு ஆற்ருவதுடன் மேலும் பல சமுக முன்னேற்ற திட்டங்களை தன்னகத்தே கொண்டு காத்திருக்கின்றது என்ற செய்தியை எமது உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.


தகவல் -
சாந்தை.கொம்
தொடர்புகளுக்கு -
shanthai @hotmail .com

















0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top