புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.தென்காசி வடக்கு கீழ கொய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் காதர் முகைதீன்.
மெக்கானிக்கல் என்ஜினியர். அவரது மனைவி ஷமீமா. கணணி என்ஜினியர். அவர்களின் மகன் முகமது ஹம்தான் (11). இவர் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவர் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அவர் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். அதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்தார்.

இது பற்றி மாணவர் முகமது ஹம்தான் கூறுகையில், எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என வேதியியல் ஆசிரியை கூறினார். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். ஒரு எலுமிச்சம் பழத்தில் 0.5 வோல்ட் மின்சாரம் கிடைக்கும் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top