82 வயது மூதாட்டி ஒருவரை படுகொலை செய்வேன் என்று மிரட்டி பாலியல் துவம்சம் செய்து உள்ளார் 23 வயது வாலிபர் ஒருவர்.மொறகொட என்கிற இடத்தில் கடந்த வாரம் இவ்வன்முறை இடம்பெற்று உள்ளது.கணவனுடன் வீட்டில் வசித்து வந்தவர். கணவன் மருந்து வாங்க அருகில் வீதிக்கு சென்று
இருக்கின்றார்.
மூதாட்டி வீட்டுக்கு வெளியில் வேறு அலுவலாக வந்து இருக்கின்றார்.அந்நேரம் அவ்வழியால் வந்த் வாலிபர் குடிநீர் கேட்டு இருக்கின்றார்.தண்ணீர் எடுக்கின்றமைக்காக மூதாட்டி வீட்டுக்குள் சென்று இருக்கின்றார்.
வாலிபன் பின் தொடர்ந்து வந்து வீட்டுக்குள் புகுந்து இருக்கின்றார்.மூதாட்டிக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார்.மூதாட்டியின் கணவர் திரும்பி வந்தபோது எல்லாம் முடிந்து விட்டது.
பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இவர்கள் வீடு திரும்புகின்றமைக்கு இடையில் பொலிஸார் வாலிபனை கைது செய்து விட்டனர்.வாலிபன் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக