மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட காலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அம்பாறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
அம்பாறை கல்லோயா சந்தி பாலத்திற்கு அருகில் இன்று காலை ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
இதுவொரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக