இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகாலை 1.40 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பதிவான முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.அதிவேகமாக
செலுத்தப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
செலுத்தப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான குறித்த நபர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக