புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதியில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தலையை துண்டித்து தண்டனை வழங்கப்பட்டது.
சவூதியில், பாலியல் பலாத்காரம், போதை மருந்து கடத்துதல், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ஷகாரிய சட்டத்தின் கீழ்
கடுமையான தண்டனைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சமி-அல்-மெகலாஃபி என்பவர், அவரது உறவினரான இளம் பெண்ணை , பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இக்குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்படி மெதீனா நகரில் உள்ள தண்ட‌னை நிறைவேற்றும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு மூன்று பேர் கொண்டவர்கள் , அவரது தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றினர்.இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சவூதியில் ‌கொடிய குற்றங்களுக்காக கடந்த ஒரு ஆண்டுகளில் 76 பேருக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும்,ஐ.நா. மனித உரிமை அமைப்பு, இது ‌போன்ற தண்டனைகளை கைவிடும்படி ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top