புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



உலகத்தில் தற்போது தமிழ்க் கலாசாரம் பரவலடைந்து பலர் மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. அந்த வகையில் மேலைத்தேய மக்கள் தங்கள் திருமணங்களை தமிழ்க் கலாசார முறைப்படி செய்து வருகின்றனர்.இந் நிலையில்தான் மட்டக்களப்பு, பாசிக்குடா
கடற்கரையிலுள்ள மாலு – மாலு ரிசோட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் ரஷ்யத் தம்பதியொன்று ரஷ்ய, சிங்கள மற்றும் தமிழ் ஆகிய கலாசரங்களின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்டனர்.

விளாடிமிர் அலெக்ஸாண்ரிச், வொல்கா யுரியேவ்னா கோர்பசேவா ஆகியோரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். மேற்படி மாலு – மாலு ரிசோட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் இடம்பெற்ற முதலாவது திருமணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தம்பியினரையும் அவர்களது உறவினர்களையும் படங்களில் காணலாம்.












இருந்தும் ஊர்போற்ற, உலகம் போற்ற இருந்த எமது கலாசாரம் தற்போது காலாவதியாகி வருவது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் மேலைத்தேய மக்கள் எமது கலாசாரத்தைப் பின்பற்றி வருகின்றனர் என்பதில் மகிழ்வடைகின்றது எமது கலாசாரம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top