இந்தியாவில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்த தொழிலாளி, தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதனால், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர்
அண்ணாநகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 32. அவரது மனைவி சத்யா, 27. தம்பதியருக்கு, குணா, 2, மற்றும் ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளது.
அண்ணாநகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 32. அவரது மனைவி சத்யா, 27. தம்பதியருக்கு, குணா, 2, மற்றும் ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால், சத்யா அடிக்கடி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம்.இது குறித்து போலீசில் அவ்வப்போது புகார் தெரிவிப்பதும், பின் போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதும் தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், ஆறு மாதத்துக்கு முன், குழந்தை பிறந்துள்ளது. அப்போது, பெற்றோர் வீட்டுக்குச் சென்ற சத்யா, மீண்டும் கணவருடன் குடும்பம் நடத்த வரவில்லை.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற சக்திவேல், தன் மனைவி சத்யாவை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வெளியே வந்த அவர், திடீரென தன் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். விபத்தில், சக்திவேல் தலைமுடி கருகியது. தொடர்ந்து, சத்யாவை சமசரம் செய்து சேர்த்து வைப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, சக்திவேல் வீட்டுக்கு திரும்பினார்.
இச்சம்பவத்தால், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக