ஒருவன் தனது நலனுக்காக வாழ்வில் மாற்றங்கள் செய்து கொள்கிறான். அவன் விரும்பும் நிம்மதியும், தேவையான பொருட்களும் அவனுக்கு தடையின்றி கிடைத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவனது வாழ்வில் மாற்றங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை. அந்த நேரத்தில் அவன்
பரிபூரணத்துவம் பெற்றவனாகிறான். தன்னைச் சுற்றி நடக்கும் தீய செயல்களைக்கூட நன்மை தரும் செயலாக பார்க்கிறான். இதனால் அவனுக்கு துன்பம் நேருவதே இல்லை. இவ்வாறு பரிபூரணம் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.
பரிபூரணத்துவம் பெற்றவனாகிறான். தன்னைச் சுற்றி நடக்கும் தீய செயல்களைக்கூட நன்மை தரும் செயலாக பார்க்கிறான். இதனால் அவனுக்கு துன்பம் நேருவதே இல்லை. இவ்வாறு பரிபூரணம் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் இன்பம் அனுபவிக்கிறோம். இன்பம் தரும் பொருள், அனுபவிக்கும் கருவி மற்றும் அதற்கேற்ற மனநிலை ஆகிய மூன்றும் இருந்தால்தான் இன்பத்தை முழுமையாக அடையமுடியும். ஆனால், இம்மூன்றும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றமடைந்து கொண்டிருக்கும். மனநிலையும் எல்லா நேரத்திலும் நிலையாக இருப்பதில்லை. எனவே, இந்த மூன்றையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
பலர் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த மனப்பான்மையைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் தம்மைத்தாமே முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து கொண்டவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் வருவதில்லை. எனவே, முதலில் உங்களை அறிந்து கொள்ளுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக