இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும், கத்ரின் மிடில்டனுக்கும் திருமணம் நடந்தது. இளவரசர் வில்லியம் இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரிகிறார்.தற்போது இவர் தென் அட்லாண்டிக்
விமானப் படையின் ஆய்வு மற்றும் மீட்பு பணி விமானி ஆக வந்துள்ளார்.
பாக்லாந்து தீவுகள் அர்ஜென்டினா அருகே உள்ளது. அர்ஜென்டினாவின் கட்டுப்பாட்டில் இருந்த பாக்லாந்தை கடந்த 1982-ம் ஆண்டு திடீரென படையெடுத்து இங்கிலாந்து கைப்பற்றி கொண்டது. அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டு வருகிறது. பாக்லாந்தை கைப்பற்றி 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அங்கு இங்கிலாந்து விழா நடத்த முடிவு செய்துள்ளது.
அதற்காகதான் இளவரசர் வில்லியம் ராணுவ அதிகாரியாக இங்கு வந்துள்ளதாக அர்ஜென்டினாவின் வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது. இளவரசர் வில்லியம் 2 மாதம் சுற்றுப்பயணமாக பாக்லாந்து வந்துள்ளார். அங்கு ஆய்வு மற்றும் மீட்பு பணிக்கான பயிற்சி மேற்கொள்கிறார் என அறிவித்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக