புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

2,200 ஆண்டுகளுக்கு முன்பு ப்ராஸ்டேட் கேன்சர் இருந்தது மம்மி சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம்.இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த
ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது. 40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கிடைத்த தகவல்கள் பற்றி சலிமா கூறியதாவது: நாங்கள் ஆய்வு செய்தது ஒரு ஆண் மம்மி. அவர் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.40 வயதில் (சிறுநீர் குழாய் பாதிப்பு) ப்ராஸ்டேட் கேன்சரால் இறந்திருக்கிறார். ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பியில் உருவாகி மெல்ல எலும்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவுவதுதான் ப்ராஸ்டேட் கேன்சர். பெண்களின் ஸ்கீன் சுரப்பியில் உருவாகும் கேன்சரும் இந்த வகையை சேர்ந்ததுதான்.

இந்த கேன்சரால் பாதிக்கப்பட ஒருவரது உணவு முறை, செக்ஸ் உறவுகள், பழக்க வழக்கங்கள், பரம்பரை பாதிப்புகள் என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இருந்திருக்கவில்லை. இயற்கை உணவுகளையே மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டனர். மக்கள்தொகை குறைவு என்பதால் சூற்றுச்சூழலும் நன்றாகவே இருந்திருக்கும். 

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது, முழுக்க முழுக்க பரம்பரை காரணத்தாலேயே அந்த மம்மிக்கு ப்ராஸ்டேட் கேன்சர் வந்துள்ளது.

இதன்மூலம், இப்போதும் ப்ராஸ்டேட் கேன்சரால் பலர் பாதிக்கப்படுவதற்கு பரம்பரையே முக்கிய காரணமாக இருக்கும் என்று நம்பலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top