புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கை காடுகளில் வாழும் அரிதான உயிரினங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்ல முற்பட்ட 6 வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம், கற்பிட்டி ஆலங்குடா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், புத்தளம்
மாவட்ட வன இலாகா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன், அவுஸ்திரேலியா, பெல்ஜியம், வெனிசுவேலா ஆகிய நாடுகளின் பிரஜைகளே கைதுசெய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரிதான உயிரினங்கள் பல மீட்கப்பட்டதுடன், அவற்றைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top