சுழிபுரம் வடக்கு, காடேறி கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோ நகரில் வசித்து வந்தவருமான யாழ்ப்பாணம்-ஐக்கிய
வியாபாரச் சங்க விநியோக முகாமையாளராக பணியாற்றிய சதாசிவம் அருணாசலம் அவர்கள் இன்று 19.02.2012 கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், அமரர்களான அருணாசலம் - இலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்;
அமரர்களான துரைசிங்கம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும்;
மீனாம்பிகை (சரசு) யின் ஆருயிர்க் கணவரும்;
லோகநாதன், சிவசிதம்பரம், செல்வராணி, புவனேந்திரம், புவனேஸ்வரி, சரோஜாதேவி, ஆகியோரின் அன்புத் தந்தையும்;
தவராணி, இந்திராணி, இரத்தினம், சகுந்தலாதேவி, உதயகுமார், தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;
அமரர்களான கனகம்மா, ஆறுமுகம், தெய்வானை, மாணிக்கம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்;
ஏகாம்பரம், நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்
அன்னாரின் பூதவுடல் 24.02.2012 ம் திகதி மாலை 5:00 மணிமுதல் மாலை 9:00 மணிவரை
MIDLAND & SHEPPERD சந்திப்பில் அமைந்துள்ள
OGDEN FUNERAL HOME ல்
பார்வைக்கு வைக்கப்பெற்று, மறுநாள், 25.02.2012 சனிக்கிழமை காலை 8:30 மணிமுதல் காலை 10:30 மணிவரை அதே FUNERAL HOME ல் ஈமைக் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்பெறும். (தகனம் செய்யும் இடம் பின்னர் அறியத்தரப்பெறும்)
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
துயர்பகிர: 001–416–266-9821 (கனடா)
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! |
0 கருத்து:
கருத்துரையிடுக