வன்னியில் தாங்கள் நிகழ்த்திய சாகசங்களை யாழில் காட்டிய இராணுவத்தினர் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சாகசக் கண்காட்சிக்கான பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
பெண் சிப்பாய்களான ஜெயசிங்க (வயது 21), ஷான்செய்ஷா (வயது 22) மற்றும் சந்திரசேகர (வயது 20) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்தவர்களாவர்.இவர்கள் உடனடியாக இராணுவத்தினரால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவத்தினர் சாகச நிகழ்வுகளை நடாத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக