புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கல்கமுவ, கல்லேவ – குருவருவத்தகமே பிரதேச மைதானத்தில் குழுவொன்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மின்னல் தாக்கி இருவர் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.45 அளவில் இடம்பெற்றுள்ளது.மின்னல் தாக்கத்தில் 18 மற்றும் 25 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால் மின்னல் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வானிலை அவதான நிலையம் என்பன ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன.

இந்த அறிவுறுத்தல்கள்படி நடந்து கொண்டால் அனர்த்தங்களில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top