புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேஸ்புக் குறித்த முறைப்பாடுகள் கடந்த மூன்று மாதங்களில் 800 க்கும் மேல் கிடைத்துள்ளதாக இலங்கையின் கணணி அவசரப் பிரிவு அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக இலங்கையின் கணனி அவசரப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான லக்ஷான் சொயிசா கருத்துத்
தெரிவிக்கையில்,
குறிப்பாக வேறு பெயர்களுடன் தனிப்பட்ட நபர்களின் கணக்கில் நுழைந்து முறைகேடுகளைச் செய்வது அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கில் உள்ள வேறு நபர்களின் படங்களைக் களவாடி புதிய பேஸ்புக் பக்கம் தொடங்கி முறைகேடுகளில் ஈடுபடுவதும் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்து போலியான பேஸ்புக் முகவரிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top