புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடாவின் வான்கூவரில் இருந்து சியோல் சென்ற பொயிற் 777 என்ற கொரிய விமானத்தில் குண்டு இருப்பதாகக் கனடா பாதுகாப்புப் படைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.மேற்படி ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கனடா பாதுகாப்பு படைக்கு
தகவல் வந்ததை அடுத்து, விமானம் புறப்பட்ட 25 நிமிடங்களிலேயே வான்கூவர் தீவின் கிழக்குக் கரையில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்கப் போர் விமானம் ஒன்றும் இந்த ஜெட் விமானத்துக்கு பாதுகாப்பாக இதன் அருகிலேயே பறந்து வந்தது. இந்த ஜெட் விமானம் தரையிறங்கும் போது தீயணைப்பு வண்டிகளும் வெடிகுண்டு தடுப்புப் படையும் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பல அவசர கால ஊர்திகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 149 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top