புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரண்டு முறை திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண் ஒருவர் குவைத்தில், இந்திய ஆண் ஒருவரை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ‘நான் இலங்கை பெண்ணை காதலித்தேன். அவள் இரு முறை திருமணம் ஆனவள் என எனக்குத் தெரியாது. தான்
ஒரு கன்னிப் பெண் எனவும் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்தாள்.’ என இந்திய ஆண் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் சென்று திருமணம் செய்து கொண்டபோது தான் இதற்கு முன்னர் திருமணம் ஆகாதவள் என்றும் கன்னிப் பெண் என்றும் குறித்த இலங்கை பெண் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சில விசாரணைகளில் பின் அவள் கன்னிப் பெண் அல்ல எனவும் இரண்டு முறை திருமணமாகி பல பிள்ளைகளுக்கு தாயானவள் எனவும் தெரிந்து கொண்ட இந்திய ஆண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இந்திய ஆண், தான் தனது காதலை மறந்து விட்டதாகக்கூறி சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

இதனையடுத்து குவைத் பொலிஸால் இலங்கை பெண் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top