புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றில் இருந்து நேரடியாக சக்தி எடுத்துக் கொள்வதாக கூறி விரதம் இருந்த சுவிட்சர்லாந்து பெண் பரிதாபமாக இறந்தார். உணவு, குடிநீர் அருந்தாமல் சித்தர்கள் பல ஆண்டு காலம் உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. உடல் இயக்கத்துக்கு தேவையான ஜீவ சக்தியை காற்றில்
இருந்து அவர்கள் நேரடியாக பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் யோகாசன குரு ஒருவர் இந்த முறையை பின்பற்றி 70 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வது தொடர்பான டாகுமென்டரி சுவிட்சர்லாந்து டிவியில் 2010,ம் ஆண்டு ஒளிபரப்பானது.

உல்ப்ஹால்டன் என்ற நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். ‘ரேடிகல் ஃபாஸ்ட்’ எனப்படும் அந்த வகை விரதத்தை தானும் கடைபிடிக்க விரும்பினார். உணவு, தண்ணீர், பழம், காய்கறி எதுவும் சாப்பிடாமல் சூரிய வெப்பத்தில் இருந்து நேரடியாக சக்தியை பெற்று உயிர் வாழப்போவதாக கூறி விரதம் தொடங்கினார். எதிர்பாராதவிதமாக கடந்த ஜனவரி 11,ம் தேதி அவர் இறந்துவிட்டார். இது தற்போது தெரியவந்துள்ளது. புகார் எதுவும் அளிக்கப்படாததால் இதுவரை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரேடிகல் விரதத்துக் கும், முறைப்படி தெரிந்துகொள்ளாமல் அதை கடைபிடிப்பதற்கும் சுவிஸ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளிலும் பலர் ரேடிகல் ஃபாஸ்ட் விரதத்தை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top