புதிதாக திருமணமான ஜோடிகள் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருச்சி அருகே ஒரு ஊரில், கணவன் அடிக்கடி தன்னுடன் கூட நினைத்ததால் எரிச்சலைடந்த ஒரு பெண் கணவன் கண்ணைக் கட்டி விட்டு அரிவாளால் வெட்டிக்
கொல்ல முயன்றுள்ளார்.
கொல்ல முயன்றுள்ளார்.
உப்பிலியாபுரம் ஒக்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் 30 வயதான நடராஜன். இவர் வாத்தியாராக இருக்கிறார். இவருக்கும் 23 வயதேயான சுபா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
புதிதாக திருமணமானவர் என்பதால் மனைவியைச் சுற்றிச் சுற்றியே வந்துள்ளார் நடராஜன். இது அவரது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இரவு சாப்பிட்டு விட்டுப் படுக்க வந்தார் சுபா. அப்போது நடராஜன் அழைத்துள்ளார். ஆனால் சுபாவுக்கு அன்று விருப்பமில்லாமல் இருந்திருக்கிறது. மேலும் தொடர்ந்து கணவர் இப்படி உறவிலேயே நாட்டமாக இருப்பதை எண்ணி கோபமடைந்துள்ளார்.
இதையடுத்து கணவர் கண்ணில் கர்ச்சீப்பைக் காட்டி விளையாடுவது போல செய்துள்ளார். அவரும் ஆசையுடன் விளையாட்டில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென சுபா ஒரு அரிவாளை எடுத்து கணவர் மார்பில் போட்டு விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த நடராஜன், சற்று நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.
பின்னர் அறைக் கதவை திறந்து கொண்டு அலறியபடி ஓடி வந்து யாரோ சிலர் வந்து நடராஜனை குத்தி விட்டதாக குரல் எழுப்பி நாடகமாடினார். வீட்டினரும், அக்கம் பக்கத்தினரும் அதை நம்பி நடராஜனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு நினைவு திரும்பியதும் போலீஸார் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையைச் சொல்லி விட்டார் நடராஜன். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர். போலீஸார் சுபாவிடம் விசாரணை நடத்தியபோது, தினசரி உறவுக்கு வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதாக கூறினார்.
இதையடுத்து கணவனை அரிவாளால் வெட்டிய புதுப் பெண் சுபாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக