சீனாவில் மேற்கு பகுதியில் உள்ள ஹெஜியாங் மாகாணத்தில் ஒரு தம்பதி கார் ஓட்டிச் சென்றனர். வழியில் சுமார் 68 வயது மதிக்க தக்க ஒரு பெண் மீது இவர்களது கார் மோதியது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே, அந்த தம்பதி அடிபட்ட பெண்ணை காரில் தூக்கி போட்டனர். அதை பார்த்த பொது மக்களிடம் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறினர். ஆனால், அவர்கள் குடித்து விட்டு கார் ஓட்டிவந்தனர்.
மேலும், அப்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.எனவே அவர் இறந்து விடுவார் என்று கருதிய தம்பதி ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டோரம் காரை நிறுத்தினர்.
பின்னர் அங்கு குழி தோண்டி அவரை உயிருடன் புதைத்தனர். இதற்கிடையே, தகவல் அறிந்த போலீசார் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர்.
ஆனால், அப்பெண் சாகவில்லை. மூச்சு திணறியபடி உயிருடன் இருந்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கார் மோதி உயிருக்கு பேராடிய பெண்ணை புதைத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக