திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அய்யம்பாளையம் 5-வது வார்டை சேர்ந்தவர் குருசாமி (வயது 80) கூலி தொழிலாளி. இவரது மகன் முருகன் (45) இவது மனைவி புஷ்பம் (40) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். முருகன் தோட்ட காவலாளி ஆவார். இந்த நிலையில் குருசாமிக்கும், புஷ்பத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விவரம் முருகனுக்கு தெரிய வந்தது. அவர் தந்தை குருசாமியிடம், என் மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டித்தார்.
நேற்று இரவு முருகன் வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் புஷ்பம்-குருசாமி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. திடீர் என்று வீட்டுக்கு வந்த முருகனை பார்த்ததும் குருசாமி எழுந்து ஓடினார். ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொண்டு தந்தையை விரட்டினார். அவரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் குருசாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தந்தை இறந்ததும் முருகன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை குறித்து பட்டிவீரன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். தந்தையை மகன் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக