புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம் ஏற்பட்டது.
வைகாசி முகூர்த்தம் என்பதால் நேற்று சிவகங்கையில் பல்வேறு இடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.


சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று காலை 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஜோடி திருமணமும் முறையாக கோயில் நிர்வாகத்தில் பதிவு செய்து, ரசீது பெற்று நடத்தப்பட்டன.
இந்நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரு ஜோடிகள் அங்கு வந்தனர். உறவினர்கள் மணமக்களை அருகருகே அமரவைத்திருந்தனர்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுக்கு பதிலாக வேறு மணமகளின் கழுத்தில் தாலிகட்டி விட்டார். இதனால் இருதரப்பு உறவினர்களுக்குள் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.தெரிந்தோ, தெரியாமலோ தாலிகட்டியாகிவிட்டது. இனிமேல் எங்களை பிரிக்காதீர்கள்,'' எனமாற்றி தாலி கட்டிய புதுப்பெண் உறுதியாக இருந்தார்.

இதனால் இரு தரப்பினரும் சமாதானமாகி சென்றனர். இதன்பின், வேறு வழியின்றி மாறி போன மற்றொரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். மாற்றி தாலிகட்டிய இரு ஜோடிகளும் கோயில் நிர்வாகத்தில் திருமணம் செய்யபதிவு செய்ய வில்லை என தெரியவந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top