புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தஞ்சையை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சதா (வயது 28). திருமணத்திற்கு பிறகும் தனது மனைவி படிக்க வேண்டும் என்று நினைத்து சதாவை சிவா கல்லூரிக்கு அனுப்பினார்.தஞ்சையில் உள்ள டிப்ளமோ என்ஜினீயரிங் கல்லூரியில் சதா படித்தார்.


தஞ்சையை சேர்ந்த குமரன் (வயது 24) என்பவரும் அதே கல்லூரியில் படித்தார். அப்போது சதாவுக்கும் குமரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் படித்து முடித்த பின்னரும் தொடர்ந்தது. தற்போது குமரன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

சதாவைவிட குமரன் 4 வயது இளையவர் என்றாலும் சதா-குமரனின் கள்ளக்காதல் செல்போன் மூலம் வளர்ந்து வந்தது. இந்த மோகத்தில் தனது 8 வயது மகளைக்கூட தவிக்கவிட்டு குமரனுடன் செல்ல சுதா தயாரானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம், நகையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சதா தனது காதலன் குமரனுடன் ஓட்டம் பிடித்தார். இருவரும் ஊட்டி சென்று உல்லாசமாக சுற்றி திரிந்து விட்டு நேற்று மாலை கோவை ரெயில் நிலையம் வந்தனர். இங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் செல்ல முடியாமல் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே தங்கி விட்டனர். இரவு நேரத்தில் ஆள் அரவம் இல்லாத ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒதுக்குப்புறமாக கள்ளக்காதல் ஜோடிகள் எல்லை மீறி சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக 2 பேரையும் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தம் ஆகியோர் விசாரித்தபோது மேற்கண்ட விவரங்களை தெரிவித்தனர். உடனடியாக அவர்களது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சதாவை அழைத்து செல்ல அவருடைய தந்தை வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் 8 வயது மகளை தவிக்கவிட்டு சதா ஓடி வந்த தகவலை தெரிவித்தார். காதல் கண்ணை மறைக்கும்! கள்ளக்காதல் சகலத்தையும் மறைக்கும்!!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top